கோபி: பச்சமலை முருகன் கோவிலின், கும்பாபிஷேக விழாவுக்கு, முகூர்த்தக்கால் நடும் விழா, கோலாகலமாக நடந்தது. கோபி அருகே பச்சமலை முருகன் கோவிலில், மூன்றாவது கும்பாபிஷேக விழா, கடந்த, ஜூலை, 2ல் நடக்கவிருந்தது. கொரோனா ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்டது. இரண்டு கோடி ரூபாய் உபயதாரர் நிதியில் நடக்கும் திருப்பணி, 90 சதவீதம் முடிந்துள்ளது. அடுத்த மாதம், 24ம் தேதி கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக முருகனுக்கு, 33 யாக குண்டங்கள், பரிவார மூர்த்திகளுக்கு, 18 யாக குண்டங்கள் என, 51 யாக குண்டங்கள் அமைத்து, எட்டு கால யாக பூஜை நடக்கவுள்ளது. கோவில் அடிவாரத்தில், ஒரு ஏக்கர் நிலத்தில் யாக குண்டங்கள் நிறுவப்படவுள்ளன. இதற்கான, முகூர்த்தக்கால் நடும் விழா, ஆகமவிதிப்படி நேற்று காலை நடந்தது. நிகழ்ச்சியில் கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.