திம்பம் மலைப்பாதையில் பழுதான லாரி: 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு | ஈரோடு செய்திகள் | Dinamalar
திம்பம் மலைப்பாதையில் பழுதான லாரி: 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஜன
2021
11:22

சத்தியமங்கலம்: திம்பம் மலைப்பாதையில் பழுதான மக்காச்சோள லாரியால், பல மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. கர்நாடகா மாநிலம், ஹாசன் பகுதியில் இருந்து மக்காச்சோள மூட்டை ஏற்றிக்கொண்டு, திருப்பூர் மாவட்டம், உடுமலைக்கு லாரி புறப்பட்டது. நேற்று காலை, 9:00 மணியளவில், சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில் வந்தது. 26வது கொண்டை ஊசி வளைவில், திரும்பும்போது, பழுது ஏற்பட்டு நகர முடியாமல் நின்றது. இதனால், மலைப்பாதையில் கனரக வாகன போக்குவரத்து பாதித்தது. டூவீலர், கார் உள்ளிட்ட இலகு ரக வாகனங்கள் மட்டும் சென்றன. ஆசனூர் போலீசார் கிரேன் மூலம், 12:00 மணியளவில் லாரியை நகர்த்தி நிறுத்திய பிறகு, கனரக வாகன போக்குவரத்து சீரானது. இதனால், 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

Advertisement
மேலும் ஈரோடு மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X