ஓசூர்: கெலமங்கலம் அருகே, பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், ஆர்.டி.ஓ., விசாரணை நடத்தி வருகிறார். கெலமங்கலம் அடுத்த ரத்தினகிரி கொத்தூரை சேர்ந்தவர் ரவி, 25; இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த காவியா, 21, என்பவருக்கும் கடந்த இரண்டரை ஆண்டுக்கு முன் திருமணமானது. இவர்களுக்கு ஆண் குழந்தை உள்ளது; தம்பதியிடையே கருத்து வேறுபாடால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால், மனமுடைந்து காணப்பட்ட காவியா, கடந்த, 16ல், வீட்டில் விஷத்தை குடித்தார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர், நேற்று முன்தினம் உயிரிழந்தார். இது தொடர்பாக, காவியாவின் தந்தை முருகன், கெலமங்கலம் போலீசில் புகார் செய்தார். தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி., சங்கீதா வழக்குப்பதிவு செய்தார். திருமணமான இரண்டரை ஆண்டுகளில், பெண் தற்கொலை செய்து கொண்டதால், ஓசூர் ஆர்.டி.ஓ., குணசேகரன் விசாரணை நடத்தி வருகிறார்.