கிருஷ்ணகிரி: ஊத்தங்கரையை சேர்ந்த, 20 வயது இளம்பெண், தனியார் கல்லூரியில், எம்.காம்., முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த, 15 அன்று, வீட்டிலிருந்து வெளியே சென்றவர், வீடு திரும்பவில்லை. இது குறித்து, பெண்ணின் பெற்றோர் ஊத்தங்கரை போலீசில் புகார் அளித்தனர். அதில், போச்சம்பள்ளி அருகே உள்ள, புளியம்பட்டியை சேர்ந்த நந்தீஸ், 23, என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளனர். அதன்படி போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், ஊத்தங்கரை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த, 19 வயது இளம்பெண், தனியார் கல்லூரியில் பி.எஸ்சி., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த, 16 அன்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து, பெண்ணின் பெற்றோர் ஊத்தங்கரை போலீசில் புகார் அளித்தனர். அதில், பனமரத்துப்பட்டியை சேர்ந்த சரவணன், 24, என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளனர். அதன்படி போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.