20 ஆண்டுகளாக வாடகை பாக்கி: ஐந்து கடைகளுக்கு நோட்டீஸ்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜன
2021
11:34

ஓசூர்: தேன்கனிக்கோட்டையில், 20 ஆண்டுகளாக வாடகை கட்டாத ஐந்து கடைகளுக்கு, கோவில் செயல் அலுவலர் நோட்டீஸ் வழங்கினார்.


தேன்கனிக்கோட்டையில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், பேட்டராய சுவாமி கோவில் உள்ளது. தேன்கனிக்கோட்டை பஸ் ஸ்டாண்ட் அருகே, இக்கோவிலுக்கு சொந்தமான ஐந்து கடைகள் உள்ளன. இக்கடைகளுக்கு கடந்த, 2001 முதல், 2020 செப்., வரை, 20 ஆண்டுகளாக ஏலம் எடுத்தவர்கள், வாடகை செலுத்தாமல் உள்ளனர். இது தொடர்பாக நோட்டீஸ் வழங்கியும், ஏலம் எடுத்தவர்கள் தொடர்ந்து வாடகை ?செலுத்தாமல் இருந்தனர். இதையடுத்து, பேட்டராய சுவாமி கோவில், செயல் அலுவலர் ஜோதி, ஐந்து கடைகளுக்கும் நோட்டீஸ் வழங்க நடவடிக்கை எடுத்து, அதை கடைகளின் கதவுகளில் ஒட்டியுள்ளார். அதில், ஒவ்வொரு கடைக்கும் தலா, 5 லட்சத்து, 72 ஆயிரத்து, 610 ரூபாய் வாடகை பாக்கி செலுத்த வேண்டும் என்றும், நோட்டீஸ் கிடைத்த, 15 நாட்களுக்குள் வாடகை பாக்கியை செலுத்தி, ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில், நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கடைகள் மறு ஏலம் விடப்படும் எனவும், நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து, அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பேட்டராய சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து, கடைகள் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற, நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.


 

Advertisement
மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X