எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 வகுப்புகள் 9 மாதங்களுக்கு பிறகு துவக்கம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜன
2021
11:35

கிருஷ்ணகிரி: ஒன்பது மாதங்களுக்கு பிறகு, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகள் இன்று துவங்குகிறது.


கடந்த மார்ச், 25ல் இருந்து கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதையடுத்து, பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு இன்றிலிருந்து(ஜன., 19), 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளை மட்டும் துவங்க, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணிகள் நேற்று நடந்தன. ஒன்பது மாதங்கள் வகுப்பறைகள் திறக்காததால், தூசு படிந்து இருந்ததை, பணியாளர்கள் சுத்தம் செய்து, கிருமி நாசினி தெளித்தனர்.


இன்று பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியருக்கு தெர்மல் ஸ்கேன் செய்யப்பட்டு, கிருமி நாசினி வழங்கி, ஒரு வகுப்பறைக்கு, 25 பேர் வீதம் அமர வைக்க உள்ளனர். மேலும், மாணவ, மாணவியர் உள்ளே வரும்போதும், வெளியில் செல்லும் போதும், சமூக இடைவெளியில் செல்ல வேண்டும் என்றும், மதிய உணவின்போது, உணவு உண்பதற்கு முன்பும், பின்பும் கைகளை சோப்பால் கழுவ வேண்டும். அவரவர் கொண்டு வரும் உணவுகளை தனித்தனியே அமர்ந்து, மற்றவர்களுக்கு பகிராமல் உண்ண வேண்டும். அனைவரும், கட்டாயம் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் அமர வேண்டும். பத்தாம் வகுப்பிற்கு மாலை, 4:30 மணிக்கும், பிளஸ் 2 வகுப்பிற்கு மாலை, 4:40 மணிக்கும் இடைவெளியில் மாணவ, மாணவியரை வெளியில் அனுப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை பின்பற்ற ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


 

Advertisement
மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X