கிருஷ்ணகிரி: சிறுமியை, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை, போக்சோவில் போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் கல்லாத்துப்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தசாமி, 19. கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் மாலை, அப்பகுதியில், 3ம் வகுப்பு படித்து வந்த, 8 வயது சிறுமி, விளையாடிக் கொண்டிருந்தார். அவரை, கோவிந்தசாமி வலுக்கட்டாயமாக வீட்டின் மேல்மாடிக்கு தூக்கிச்சென்றார். இதை பார்த்த சிறுமியின், 6 வயது தம்பி, தன் பெற்றோரிடம் கூறினார். அதிர்ச்சியடைந்த அவர்கள், மேல்மாடிக்கு சென்று பார்த்தபோது, வாலிபர் கோவிந்தசாமி, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். சிறுமியை மீட்ட பெற்றோர், கோவிந்தசாமியை அடித்து, உதைத்து, பர்கூர் அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் போக்சோவில் வழக்குப்பதிவு செய்து, கோவிந்தசாமியை கைது செய்தனர். பர்கூர், அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கற்பகம் விசாரித்து வருகிறார்.