புவனகிரி : புவனகிரி அருகே ஆற்றில் தவறி விழுந்தவர், மூன்று நாட்களுக்குப் பிறகு அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டது.
புவனகிரி அடுத்த ஆதிவராகநத்தம் ஆற்றில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக அப்பகுதியினர் நேற்று காலை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.தகவல் அறிந்து வந்த புவனகிரி போலீசார் சென்று பார்த்த போது, கடந்த 17ம் தேதி இயற்கை உபாதை கழிக்கச் சென்று தவறி வடிகால் ஆற்றில் விழுந்த முள்ளிப்பள்ளத்தைச் சேர்ந்த சிகாமணி, 70; என தெரியவந்தது. புகாரின் பேரில் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.