விருத்தாசலம் : மனைவியைக் காணவில்லை என கணவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
விருத்தாசலம் அடுத்த ஆலடியைச் சேர்ந்தவர் ராஜி, 38; இவரது மனைவி அம்பிகா, 35; கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.கடந்த 10ம் தேதி இரவு முதல் அம்பிகாவைக் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.கணவர் ராஜி கொடுத்த புகாரின் பேரில், ஆலடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.