விருத்தாசலம் : விருத்தாசலத்தில் பெண்ணைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் உட்பட மூவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விருத்தாசலம் வயலுாரைச் சேர்ந்தவர் பழனிச்சாமி, 52; இவரை, அதே பகுதியைச் சேர்ந்த ரகுராமன், 25; ஆதரவாளர்கள் மணிகண்டன், ராஜாமணி ஆகியோர் கடந்த 16ம் தேதி திட்டி தாக்கினர்.இதனை பழனிசாமி உறவினர்களான இளையநிலா, இளையசூரியா, மனோஜ் ஆகியோர் தடுக்க முயன்றனர். அப்போது, ரகுராமன் டியூப் லைட்டை உடைத்து இளையசூரியா வயிற்றில் குத்தி, கொலை மிரட்டல் விடுத்தார்.புகாரின் பேரில் ரகுராமன், மணிகண்டன், ராஜாமணி ஆகியோர் மீது விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.