குறிஞ்சிப்பாடி : ஊரக புத்தாக்க திட்டத்தின் தொழில்சார் சமூக வல்லுனர்களுக்கான எழுத்துத் தேர்வு, குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது.
ஊராட்சிக்கு ஒரு நபர் வீதம் இந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட உள்ள நிலையில், மொத்தம், 264 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில், 209 பேர் எழுத்து மற்றும் அதனைத் தொடர்ந்து ஆன்லைன் தேர்வில் நேரடியாக பங்கேற்றனர்.தேர்வு செய்யப்படுவோருக்கு, தினமும், 250 ரூபாய் வீதம், மாதம் தோறும், 20 நாட்கள் ஊராட்சிகளில் வேலை கொடுக்கப்படும். எழுத்துத் தேர்வுக்கு, 50 மதிப்பெண், ஆன்லைன் தேர்வுக்கு, 25 மற்றும் நேர்முகத் தேர்வுக்கு, 25 மதிப்பெண் வழங்கப்படும். தேர்வானவர்கள் விரைவில் பணிக்கு அழைக்கப்படுவார்கள்.இத்தகவலை புத்தாக்க திட்ட குறிஞ்சிப்பாடி வட்டார அணி தலைவர் கமலவள்ளி தெரிவித்தார்.