விருத்தாசலம் : மேட்டுக்காலனி - இளமங்கலம் கிராம சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருத்தாசலம் மேட்டுக்காலனி - இளமங்கலம் கிராம சாலையில் தினமும் 1000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.3 கி.மீ., துாரம் உள்ள இந்த சாலை போடப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால், சாலை தற்போது குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.மேலும், இந்த சாலையில் உள்ள பள்ளங்களில் தேங்கிய மழைநீர் இன்னமும் வடியாமல் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர்.எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி, சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.