கடலுார் : புதுச்சேரி சாராயம் பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.கடலுார், மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் தாரகேஸ்வரி தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றனர்.கடலுார் அடுத்த எம்.புதுார், காசநோய் மருத்துவமனை அருகே புதரில் மூன்று சாக்கு மூட்டைகளில் தலா 40 லிட்டர் புதுச்சேரி சாராயம் பதுக்கி வைத்திருந்த கடலுாரைச் சேர்ந்த ஆறுமுகம், 40; என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 120 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.