விக்கிரவாண்டி : அரசு பணியாளர் சங்க மாவட்ட செயற்குழுக் கூட்டம் முண்டியம்பாக்கத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ராம்குமார் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் சிங்காரம் வரும் பிப். 6ம் தேதி சென்னையில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்பது குறித்து ஆலோசனை வழங்கினார்.மாநில பொருளாளர் சதீஷ், முன்னாள் மாநில துணைப் பொதுச்செயலாளர் அருணகிரி, மாநில துணைத் தலைவர் மாணிக்கம், சாலைப் பணியாளர் சங்க குமரவேல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை விடுதி பணியாளர் சங்க தென்னரசு, கூட்டுறவு சங்க இணைப் பதிவாளர் துறை சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.மாவட்ட துணைத் தலைவர் நடராஜன் நன்றி கூறினார்.