17 சவரன் நகை திருட்டு மர்ம நபர்களுக்கு வலை | கடலூர் செய்திகள் | Dinamalar
17 சவரன் நகை திருட்டு மர்ம நபர்களுக்கு வலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஜன
2021
22:54

குறிஞ்சிப்பாடி : குறிஞ்சிப்பாடி அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து நகைகளைத் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.



குறிஞ்சிப்பாடி அடுத்த வெங்கடாம்பேட்டை, மேற்கு தெருவைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன், திவாகரன், 28; இவரது தந்தை இறந்ததால் தாய், மற்றும் அண்ணன் செந்தில்குமார் ஆகியோருடன் வசித்து வருகிறார்.நேற்று முன்தினம் செந்தில்குமார் வெளியூருக்கும், அவரது தாய் வயல் வேலைக்கும் சென்ற பிறகு, வீட்டை பூட்டிய திவாகரன், சாவியை வீட்டின் முகப்பில் உள்ள பையில் வைத்து விட்டு வெளியே சென்றிருந்தார்.சிறிது நேரம் கழித்து, வந்து பார்த்தபோது, வீடு திறக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 17 சவரன் நகைகள் திருடு போயிருப்பது தெரியவந்தது.



தகவல் அறிந்து வந்த, குறிஞ்சிப்பாடி போலீசார், மோப்பநாய் அர்ஜூன் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர்.மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X