திண்டிவனம் : சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழாவை முன்னிட்டு, திண்டிவனத்தில் விபத்துகள் அதிகம் நடக்கும் இடங்கள் கண்டறியும் பணி நடந்தது.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழாவையொட்டி, திண்டிவனம் பகுதியில் அடிக்கடி விபத்து நடைபெறும் இடங்களை கண்டறியும் பணி நேற்று நடந்தது.அதனையொட்டி, டி.எஸ்.பி., கணேசன் தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர் முருகசேன், வாகன ஆய்வாளர் முருகவேல், நகாய்அதிகாரிகள் தீனதயாளன், அண்ணாமலை, முத்து உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர், திண்டிவனம்-திருண்ணாமலை புறவழிச்சாலை, திண்டிவனம்-சென்னை சாலையில் உள்ள ஓங்கூர் டோல்கேட், கூட்டேரிப்பட்டு உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்தனர்.
இதில் விபத்து நடக்கும் இடங்களில் சைன் போர்டு, ரிப்ளக்டர் உள்ளிட்டவைகளை அமைக்க முடிவு செய்யப்பட்டது.இதுபற்றி டி.எஸ்.பி.,கூறும் போது,' எஸ்.பி.,அறிவுரையின் பேரில் ஏற்கனவே திண்டிவனம் பகுதியில் விபத்து ஏற்படும் இடங்களில் அதிக அளவில் பேரி கார்டு வைத்துள்ளதால், விபத்துக்கள் குறைந்துள்ளது. தற்போது மேலும் சில இடங்களில் விபத்து தடுப்பு நடவடிக்கைகள் நகாய் உதவியுடன் மேற்கொள்ளப்பட உள்ளது'' என்றார்.