விழுப்புரம் : விழுப்புரத்தில் வரும் 22ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வௌளிக்கிழமை தோறும், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வரு கிறது. இதன் மூலம் கடந்தாண்டில் 5,273 நபர்கள் பணியாணை பெற்றுள்ளனர்.இதையடுத்து, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 22ம் தேதி விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் நடக்கிறது.
காலை 10.00 மணிக்கு துவங்கி, மாலை 3.00 மணி வரை நடைபெறும் முகாமில், பல தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, தங்கள் நிறுவனத்திற்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர்.இதில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் நடைபெறும் பல திறன் பயிற்சிகளுக்கான சேர்க்கையும் நடைபெறுகிறது.முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள், 'https://www.tnprivatejobs.tn.gov.in' என்ற இணையதள முகவரியில் தங்களின் விபரங் களை பதிய வேண்டும். மேலும், தங்களின் கல்வி சான்றுகள் மற்றும் சுயகுறிப்போடு வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற் கலாம்.