விழுப்புரம் : வாலிபரை தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம், மரகதபுரத்தை சேர்ந்தவர் ஜானகிராமன் மகன் பூமிநாதன், 21; இவர் கடந்த 16ம் தேதி ஊராட்சி அலுவலகம் அருகில் நின்றிருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த அஜித், 23; பூமிநாதன் மீது உரசியபடி சென்றார்.அதை தட்டிக் கேட்ட பூமிநாதனை, அஜித் மற்றும் அவரது நண்பர் ரஞ்சித், 24; ஆகியோர் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.புகாரின்பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து, அஜித், ரஞ்சித்தை கைது செய்தனர்.