விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பில் 74.44 சதவீதமும், பிளஸ் 2 வகுப்பில் 71.38 சதவீதமும் மாணவர்கள் முதல் நாளில் வருகை புரிந்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 192 உயர்நிலைப் பள்ளி கள் மற்றும் 193 மேல்நிலைப் பள்ளிகள் கடந்த 9 மாதங்களுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டதுஇதில், பத்தாம் வகுப்பில் மொத்தம் 25,043 மாணவர்களில் 18,643 மாணவர் களும், பிளஸ் 2 வகுப்பில் 21,056 மாணவர்களில் 15,030 மாணவர்களும் பள்ளிக்கு வருகை புரிந்தனர். இது, பத்தாம் வகுப்பில் 74.44 சதவீதமும், பிளஸ் 2 வகுப்பில் 71.38 சதவீதமும் ஆகும்.