அனுப்பர்பாளையம்:திருப்பூர், பெரியார் கால னியை சேர்ந்தவர், நாட்டரசன், 45; பனியன் தொழிலாளி. மனைவி மலர்க்கொடி,40; மகள் பிரியா, 17 உடன் வசித்து வந்தார்.பிரியா, அவிநாசியில் உள்ள ஒரு பள்ளியில், பிளஸ் 2 படித்து வந்தார். மலர்க்கொடியும், பிரியாவும் நேற்று சாணிப்பவுடர் கரைத்துக் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தனர்.இருவரையும், அக்கம்பக்கத்தினர் மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி இருவரும் இறந்தனர்.அனுப்பர்பாளையம் போலீசார் நடத்திய விசாரணையில், 'பள்ளி திறக்கப்பட்டு, பிளஸ் 2 வகுப்புகள் துவங்கின. பிரியா பள்ளிக்கு செல்லாததை, மலர்க்கொடி தட்டிக்கேட்டார். இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.மலர்க்கொடி, சாணிப்பவுடர் கரைத்து குடித்தார். பிரியாவும், எஞ்சியிருந்த சாணிப்பவுடரை கரைத்து குடித்தார்' என்று தெரியவந்தது. தற்கொலைக்கு வேறு காரணமா என்றும் விசாரணை நடக்கிறது.