திடீர் குழியால் ஆபத்துசுக்கிரவார்பேட்டை பசுவண்ணன் கோவில் ரோட்டில் ஏற்பட்டுள்ள திடீர் குழியால், விபத்துகள் நிகழ வாய்ப்புள்ளது. உடனடியாக சரிசெய்ய வேண்டும்.- மாரியப்பன், சுக்கிரவார்பேட்டை.
நோய் பரவும் அபாயம்நஞ்சுண்டாபுரம், ரயில்வே மேம்பாலத்திற்கு கீழ், வெள்ளலுார்சாலையில், இறைச்சி மற்றும் சுகாதார கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்.- சூர்யா, வெள்ளலுார்.
தெருவிளக்கு பழுதுகணபதி, 40வது வார்டு, ஆவாரம்பாளையம் மெயின் ரோடு, ஷோபா நகரில், மின்கம்பத்தில், கடந்த சில மாதங்களாக விளக்கு எரிவதில்லை.- செல்வராஜன், அபிராமி நகர்.
சாலையை சீரமைக்கணும்சுந்தராபுரம் மெயின் ரோடு, செல்லாண்டியம்மன் கோவில் எதிரில், சேதமடைந்த அன்புநகர் இணைப்பு சாலையை சீரமைக்க, பல ஆண்டுகளாக வலியுறுத்தியும் நடவடிக்கையில்லை.- அன்பு நகர் பொதுமக்கள்.
சாலையில் தேங்கும் நீர்கணபதி, சி.எம்.எஸ்., பள்ளி பேருந்து நிலையம் எதிரே, சாலையில் உள்ள குழியில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக இருக்கிறது.- விஷ்ணுவர்தன், கணபதி.
குட்டையை ஆக்கிரமித்து வீடுகள்செட்டிபாளையம் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட ஜெயம் நகரில், குட்டையை சுற்றி அமைக்கப்படும் வீடுகள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது.- நடராஜ், செட்டிபாளையம்.
சிதறிக்கிடக்கும் கழிவுகள்டவுன்ஹால், பூம்புகார் விற்பனை நிலையம் அருகே தொட்டியை சுற்றிலும் கழிவுகள் சிதறி அசுத்தமாக இருக்கிறது.- ஜெய்நரேன், உக்கடம்.
தொடரும் விபத்துகள்சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோட்டில், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம், சாலையின் மட்டத்தை விட உயரமாக பதித்துள்ள பெட்டியால், தொடர்ந்து விபத்து நிகழ்கிறது.- ஆனந்தகுமார், சுந்தராபுரம்.
வாகன ஓட்டிகளுக்கு சிரமம்பழையூர், 55வது வார்டில், மெயின் ரோட்டில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாவதால், உடனடியாக சரிசெய்ய வேண்டும்.- கார்த்திக், பழையூர்.
சுகாதார சீர்கேடுஇருகூர், காமாட்சி புரம், ஐந்தாவது வார்டில், சாக்கடையை துார்வாரிய பின்பு கழிவுகளை சலையிலே போடுவதால், சுகாதாரமற்ற சூழல் நிலவுகிறது.- வேல்முருகன், இருகூர்.
குடிமகன்கள் அட்டகாசம்சுந்தராபுரம், சிட்கோ முதல் காமராஜர் நகர் வரையுள்ள சாலையில், டாஸ்மாஸ்கில் மதுபானம் வாங்கும் சிலர் திறந்தவெளியில் நின்று குடித்துவிட்டு, வேண்டாத செயல்களில் ஈடுபடுகின்றனர்.- அமுதா, சிட்கோ.
போதைப்பொருள் விற்பனைவெள்ளலுார், மரப்பாலம் அருகே சட்டவிரோதமாக போதைப்பொருள் விற்பவர்கள் மீது, காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ஹீனா, வெள்ளலுர்
நாய் தொல்லைபீளமேடு, 39வது வார்டு, ஏ.டி., காலனியில் அதிகளவில் திரியும் தெருநாய்களால், மக்கள் வெளியில் நடமாடவே அஞ்சுகின்றனர்.- கிருபாகரன், பீளமேடு.
குப்பை தேக்கம்டவுன்ஹால், பேரூர் ரோட்டில், ஆட்டோ ஸ்டேண்ட் அருகே பல நாட்களாக தேங்கிகிடக்கும் குப்பையால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.- நந்தினி, வடவள்ளி.
வழுக்கும் வாகனஓட்டிகள்தெலுங்குபாளையம், தாமு நகரின் சாலை சேறும், சகதியுமாக உள்ளது. பாதசாரிகள், வாகனஓட்டிகள் வழுக்கி விழும் நிகழ்வுகள் தொடர்கிறது.- விவேக், தாமு நகர்.