கோவை:பிளாஸ்டிக் கம்பெனியில் பார்சல் மேலே விழுந்ததில், சூபர்வைசர் பலியானார்.குனியமுத்துார், பி.கே.புதூர், பாரதியார் வீதியை சேர்ந்த பிரதீப்,55, அங்குள்ள பிளாஸ்டிக் கம்பெனியில் சூபர்வைசராக பணியாற்றி வந்தார்.கம்பெனியில் தொழிலாளர்கள் பிளாஸ்டிக் பண்டல்கள் இறக்குவதை, மேற்பார்வை செய்த போது, ஒரு பண்டல் தவறி அவரது தலையில் விழுந்தது. படுகாயமடைந்த அவரை, கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி இறந்தார். குனியமுத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.