கோவை: மாநகராட்சி மேற்கு மண்டலத்தில், உதவி கமிஷனர் செந்தில் அரசன் முன்னிலையில், நேற்று மருதமலை அடிவாரம், கிருஷ்ணசாமி ரோடு, டி.பி.,ரோடு, ஆரோக்கியசாமி ரோடு(மேற்கு) உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாடகை செலுத்தாத, 13 கடைகள் பூட்டப்பட்டன.ஆலோசனை கூட்டம்கோவை: தி.மு.க., கோவை மாநகர் மேற்கு மாவட்ட வக்கீல் அணி ஆலோசனை கூட்டம், மாவட்ட பொறுப்பாளர் பையாக்கவுண்டர் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் எதிர் வரவுள்ள சட்டசபை தேர்தலில் பணியாற்றுவது, தேர்தல் வியூகம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.குடிசை மாற்று வாரிய பணிகோவை: குடிசை மாற்று வாரியத்தில் காலியாக உள்ள, அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்களை, வாரியத்தின் இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும், 31ம் தேதிக்குள் அனுப்ப குடிசை மாற்று வாரியம் அறிவித்துள்ளது.
ஆன்லைனில் தேர்தல் விழிப்புணர்வு
கோவை: தமிழக தேர்தல் ஆணையம், இளம் வாக்காளர்கள் தங்கள் கடமைகளை தேர்தல் நாளன்று, தவறாமல் செலுத்த வேண்டும் என்பதற்காக, இணைய பக்கங்களில் தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய துவங்கியுள்ளது. இளம் வாக்காளர்களை கவரும் வகையில் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும், விழிப்புணர்வை ஏற்படுத்த துவங்கியுள்ளது.டீன் காளிதாசுக்கு பாராட்டு!கோவை: இந்தியன் மெடிக்கல் அசோசியேஷனில் உள்ள, தனியார் மருத்துவமனை டாக்டர்கள் நேற்று கோவை அரசு மருத்துவமனைக்கு சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
தொடர்ந்து, தடுப்பூசி போடப்படும் அறை, கண்காணிப்பு அறை மற்றும் சிகிச்சை அளிக்கும் அறைகளை பார்வையிட்ட டாக்டர்கள், அனைத்து ஏற்பாடுகளும், நல்ல முறையில் மேற்கொள்ளப்படுகிறது என டீன் காளிதாசுக்கு பாராட்டு தெரிவித்தனர்.தி.மு.க., பொங்கல் விழாபோத்தனுார்: போத்தனூரை அடுத்த கணேசபுரம் மூரண்டம்மன் கோவில் மண்டபத்தில், 100வது வார்டு தி.மு.க., சார்பில் பொங்கல் விழா, பொறுப்பாளர் பொன் சுரேஷ்பாபு தலைமையில் நடந்தது. 200 பேருக்கு வேட்டி, சேலை வழங்கப்பட்டது.
கட்சியின் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சேனாதிபதி, குறிச்சி வடக்கு பகுதி பொறுப்பாளர் காதர், முன்னாள் கவுன்சிலர் மகாலிங்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.தி.மு.க., ஆர்ப்பாட்டம்கோவை: சிங்காநல்லுார் ஹவுசிங் யூனிட் பகுதியில், புதிய வீடுகளை தாமதமின்றி கட்டித்தர வலியுறுத்தி, தி.மு.க., சார்பில், இன்று மாலை, 4:00 மணிக்கு சிங்காநல்லுார் உழவர் சந்தை அருகில், கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது என, எம்.எல்.ஏ., கார்த்திக் நிருபர்களிடம் தெரிவித்தார்.