கோத்தகிரி,:கோத்தகிரி அரசு மருத்துவமனையில், தடுப்பூசி போடும் பணி நேற்று துவங்கி, முதற்கட்டமாக, 100 பேருக்கு போடப்பட்டது.நாடு முழுவதும் மருத்துவத்துறையினர்மற்றும் முன்கள பணியாளர்களுக்கு, கடந்த, 16ம் தேதி முதல், கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக, கோத்தகிரி அரசு மருத்துவமனையில், தலைமை மருத்துவர் சிவக்குமார், தடுப்பூசி போட்டு, பணியை துவக்கி வைத்தார். முதற்கட்டமாக, மருத்துவர்கள், செவிலியர்கள், துாய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என, 100 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.மருத்துவர்கள் கூறுகையில், 'இனிவரும் நாட்களில் படிப்படியாக, அரசு மருத்துவமனை மற்றும் அந்தந்த ஆரம்ப சுகாதார மையங்களில் தடுப்பூசி போடப்படும்' என்றனர்.