முதல் நாளில் 90 சதவீதம் மாணவர்கள் வருகை : தேர்வு வாரிய செயலர் ஆய்வு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜன
2021
01:19

ஊட்டி:நீலகிரியில், பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளில், 90 சதவீதம் மாணவர்கள் வருகை புரிந்துள்ளனர்.நீலகிரியில், கொரோனா தொற்று காரணமாக, 10 மாதங்களுக்கு பின், 'அரசு, அரசு உதவிபெறும் பள்ளி, மெட்ரிக்., சி.பி.எஸ்.இ., பள்ளி,' என, 218 பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடந்தது.மாணவர்கள் வளாகத்தில் நுழையும் போது, மாஸ்க் அணிவதை உறுதி செய்தனர். கிருமி நாசினி போட்டு சுத்தம் செய்ததுடன், உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பின், அனுமதித்தனர். மாணவர்கள் சமூக இடைவெளி கடைப்பிடித்து அமரும் வகையில் அமைக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்தனர்.முதல் இரண்டு நாட்களில் மாணவர்களுக்கு,'கவுன்சிலிங்' நடத்தி மன நல ஆலோசனை வழங்கப்படுகிறது. கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தேவாலா அரசு உண்டு உறைவிடமேல்நிலைப் பள்ளிக்கு சென்று, வழிக்காட்டு நெறிமுறைகள் குறித்து ஆய்வு செய்தார். ஊட்டி சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, குன்னுார் அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளிகளை ஆசிரியர் தேர்வு வாரிய செயலர் சேதுராமவர்மா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன் ஆய்வு செய்தனர். ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வுக்கு பின், மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.ஆசிரியர் தேர்வு வாரிய செயலர் சேதுராம வர்மா கூறுகையில்,''நீலகிரியில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் ௨ வகுப்புக்காக, 218 பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. அரசு தெரிவித்த வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தும் தவறாமல், கடைபிடிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வைட்டமின் மாத்திரை வழங்கப்பட்டது,'' என்றார்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X