கோத்தகிரி:கோத்தகிரி அருகே, பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட, ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட, மேல் அணையட்டி பகுதியில் பணம் வைத்து, சூதாட்டம் ஆடுவதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்படி, நேற்று முன்தினம் இரவு, கோத்தகிரி எஸ். ஐ., வேல்முருகன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, ஒரு வீட்டில் சந்தேகத்தின் பேரில் ஆய்வு செய்தனர். அப்போது, பணம் வைத்து, ஒன்பது பேர், சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.சூதாட்டத்தில் ஈடுபட்ட, தங்கவேல், 40, பபித், 33, நஞ்சப்பன், 48, மணி, 27, சுந்தர் 34, கார்த்திகேயன், 51, விசுவநாதன், 50, அப்துல் மஜீத், 52 மற்றும் ஸ்டாலின் 37 ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து, 8,200 ரூபாய் மற்றும் சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர்.