காஞ்சிபுரம் : பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு, வருமானம் கிடைக்கும் வகையில், ஆடுகள், மாடு வழங்குவது போல், நாட்டு கோழிக்குஞ்சுகள் வழங்கப்படுகின்றன.இந்த ஆண்டு, ஓர் ஒன்றியத்திற்கு, 400 பேர் வீதம், பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு ஒருவருக்கு, 25 கோழிக்குஞ்சுகள் வீதம், நேற்று முன்தினம் வழங்கப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், 1,200 பேருக்கு, கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டன.இத்தகவலை கால்நடை துறை அதிகாரி ஒருவர் கூறினார்.