மதுராந்தகம் : மதுராந்தகம் அருகே, இருசக்கர வாகனத்தில் சென்ற கணவன்-, மனைவி, அடையாளம் தெரியாத வாகனம் மோதி, அதே இடத்திலேயே உயிரிழந்தனர்.
மறைமலைநகர் அடுத்த, பேரமனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன், 43. இவரது மனைவி ஆதிலட்சுமி 40.தம்பதி, நேற்று காலை, 8:00 மணிக்கு வீட்டில் இருந்து, மதுராந்தகம் நோக்கி, இருசக்கர வாகனத்தில் சென்றனர்.அப்போது, சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மாமண்டூர் சாலை அருகே, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
இதில், சீனிவாசன் மற்றும் அவரது மனைவி, தலையில் பலத்த காயமடைந்து, அதே இடத்திலேயே உயிர் இழந்தனர்.தகவலறிந்த படாளம் போலீசார், அவர்களது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி, விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.