பேரூர்:கோவை, பேரூர் அடுத்த தீத்திபாளையம் மாதேஷ் கவுண்டர் வீதியை சேர்ந்தவர் அய்யாசாமி, 37; மரம் வெட்டும் தொழிலாளி.
இவர், நேற்று முன்தினம் அதே கிராமத்தை சேர்ந்த ராமசாமி, 33, பட்டீஸ்வரன், 29, ரங்கநாதன்,
25, ரங்கநாதன், 28, ஆறுமுக கவுண்டனுாரை சேர்ந்த சின்னராஜ், 32, பச்சாபாளையத்தை சேர்ந்த ஆனந்தன், 18, ஆகியோருடன் வனத்துக்குள் வேட்டைக்காக, சென்றுள்ளார்.வனவிலங்கு வேட்டைக்காக, கள்ளத் துப்பாக்கியில்வெடிமருந்தை நிரப்பியுள்ளனர்.
அதில், எதிர்பாராதவிதமாக துப்பாக்கி வெடித்ததில், அய்யாசாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அடர்ந்த வனத்தில் இருந்து மீட்டு வரும்போது, வழியிலேயே உயிரிழந்தார்.அவரது உடலை இரவு நேரத்தில் வீட்டுக்கு எடுத்து சென்ற நண்பர்கள் அடக்கம் செய்ய முயன்றனர். தகவலறிந்து சென்ற பேரூர் போலீசார், உடலை கைப்பற்றி விசாரித்தனர். ஆனந்தன் மற்றும் ராமசாமியை கைது செய்தனர். ராமசாமி கொடுத்த தகவலின்படி, வனத்தில் பதுக்கி வைத்திருந்த துப்பாக்கியை மீட்டு, தப்பியோடிய நான்கு பேரை தேடுகின்றனர்.