கோவை:கோவையில், இதுவரை 52 ஆயிரத்து 531 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.
மாவட்டத்தில் நேற்று புதிதாக, 58 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. மொத்த பாதிப்பு, 53 ஆயிரத்து 749 ஆக உயர்ந்தது. கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 55 வயது ஆண் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். மொத்த பலி எண்ணிக்கை, 664 ஆக உயர்ந்தது.
அரசு, தனியார் மருத்துவமனைகள், சிறப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வந்த, 98 பேர் ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பினர். குணமடைந்தோர் எண்ணிக்கை 52 ஆயிரத்து 531 ஆக உயர்ந்தது. தற்போது, 554 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.
878 பேர் தடுப்பூசிகோவை மாவட்டத்தில் நேற்று, கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் விபரம்:கோவை அரசு மருத்துவமனை - 385, பொள்ளாச்சி அரசு மருத்துவமனை - 98, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை - 40, காரமடை ஆரம்ப சுகாதார நிலையம் - 355, மொத்தம் - 878.