உடுமலை:திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், நாளை (21ம் தேதி) நடக்கிறது.கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக, மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், காணொளி காட்சி வாயிலாக நடக்கிறது. ஜன., மாதத்திற்கான குறை தீர் முகாம், நாளை (21ம் தேதி) காலை, 10:30 மணிக்கு நடக்கிறது.வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்கள் மற்றும் வேளாண் விரிவாக்க மையங்களில், ஏற்பாடு செய்யப்பட்ட அரங்கில் இருந்து, விவசாயிகள் காணொளி காட்சி வழியாக, மாவட்ட கலெக்டரிடம் குறைகளை தெரிவிக்கலாம், என அறிவிக்கப்பட்டுள்ளது.