பாத்து ரொம்ப நாள் ஆச்சு... எப்படி இருக்க...! நலம் விசாரித்த மாணவ, மாணவியர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜன
2021
02:52

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளோடு, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகள் நேற்று துவங்கின.பள்ளிகளில் துாய்மை பணிகள், இரு நாட்களாக நடந்தன. மாணவர்கள், முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்; கைகளை கிருமி நாசினி கொண்டு கழுவ வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தனர். வகுப்பறைக்குள் நுழையும் முன், வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, இதுகுறித்தான தகவல், தனியாக பதிவு செய்யப்பட்டன.



ஒவ்வொரு மாணவரும், மாணவியும், தங்களது பெற்றோரிடம், 'தனது மகன் அல்லது மகள் பள்ளிக்கு செல்வதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை' என, கடிதம் பெற்று ஆசிரியர்களிடம் ஒப்படைத்தனர்.ஒரு வகுப்பறைக்கு, 25 மாணவர்கள் வீதம் அமர வைக்கப்பட்டனர். ஒவ்வொரு வகுப்பறையிலும், மாணவர்களுக்கு எந்தெந்த பாடங்களை நடத்துவது என்பது குறித்து, ஆசிரியர்களுக்கு கால அட்டவணை தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டன.* நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலை பள்ளி வளாகத்தில், வழிகாட்டு நெறிமுறைகளோடு மூன்று வகுப்புகளில் அமர வைக்கப்பட்டனர். இதே நடைமுறை, பல்வேறு அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டன.*மேட்டுப்பாளையம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், தலைமை ஆசிரியை இந்திரா மாணவியரிடையே பேசுகையில், ''பல மாதங்களுக்கு பின், பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.


நீண்ட நாட்களுக்கு பின் சந்தித்தோம் என, ஒருவருக்கொருவர் கை கொடுப்பதை தவிர்க்க வேண்டும். சமூக இடைவெளியை ஒவ்வொருவரும் கடைபிடித்து அமர வேண்டும்,'' என்றார்.* அன்னுார் ஒன்றியத்தில், அன்னுார், சொக்கம்பாளையம், ஆணையூர், கெம்பநாயக்கன்பாளையம், காட்டம்பட்டி உட்பட ஆறு அரசு மேல்நிலைப் பள்ளிகளும், பொன்னேகவுண்டன் புதுார், பசூர், பெரியபுத்துார் ஆகிய மூன்று அரசு உயர்நிலைப் பள்ளிகளும், நேற்று திறக்கப்பட்டன. 45 முதல், 55 சதவீத மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வந்தனர். காட்டம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பிரபாகர் கூறுகையில், ''மாணவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்டது. பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது குறித்த விபரம் தெரிவிக்கப்பட்டது,'' என்றார்.* எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தில், கோவில்பாளையம், அத்திப்பாளையம், வெள்ளமடை, காளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும், 50 சதவீதத்துக்கு குறைவான மாணவ, மாணவிகள் வந்திருந்தனர்.


சூலுார் வட்டாரத்தில், அரசூர், கண்ணம்பாளையம், இருகூர், சின்னியம்பாளையம், சூலுார், வாகராயம்பாளையம், காங்கயம்பாளையம் உட்பட பகுதிகளில் மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டன. மாரணவர்களுக்கு சானிடைசர் வழங்கப்பட்டது.உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. முகக்கவசம் அணிந்து, தனிநபர் இடைவெளியுடன் வகுப்புக்கு தலா, 20 பேர் அமர வைக்கப்பட்டனர்-நிருபர் குழு -
.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X