மேட்டுப்பாளையம்,:தமிழக முதல்வர் பழனிசாமி, மேட்டுப்பாளையம், காரமடைக்கு, வரும் 24ம் தேதி வரவுள்ளார்.மேட்டுப்பாளையத்தில் பஸ் ஸ்டாண்ட் அருகே வேனில் இருந்தபடியே பேசுகிறார். பின், காரமடை அரங்கநாதர் கோவிலுக்கு செல்கிறார்.முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சி இடங்களை, மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி., ஆரோக்கியராஜ் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் சிவகுமார், செல்வராஜ் மற்றும் எம்.எல்.ஏ., சின்னராஜ், முன்னாள் எம்.பி., செல்வராஜ், கட்சி நிர்வாகிகள் ஆய்வு செய்தனர்.