வால்பாறை:வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் சிறிய அளவிலான மயானத்தில் தான், இறந்தவர்களின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.குறிப்பாக, மக்கள் நெருக்கம் மிகுந்த வால்பாறை நகரில் உள்ள ஹிந்துக்கள் மயானம் குறுகலாக இருப்பதால், இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய முடியாத நிலை உள்ளது.இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, வால்பாறையில் மின்மயானம் அமைக்க வேண்டும் என்று, பல்வேறு அமைப்புக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்நிலையில், வால்பாறை வந்த உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, 'வால்பாறை மக்களின் கோரிக்கையை ஏற்று, நகராட்சி சார்பில் விரைவில் மின்மயானம் அமைக்கப்படும்,' என்றார்.