பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், சமத்துவ பொங்கல் விழாவையொட்டி போலீஸ் - பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டிகள் நடந்தது.பொள்ளாச்சி போலீஸ் உட்கோட்டம் சார்பில், போலீஸ் - பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டி மற்றும் சமத்துவ பொங்கல் விழா, என்.ஜி.எம்., கல்லுாரி மைதானத்தில் நடந்தது. விழாவையொட்டி, போலீசார் புதுப்பானையில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து போட்டிகள் நடத்தப்பட்டன. டி.எஸ்.பி., சிவக்குமார் தலைமை வகித்து போட்டிகளை துவக்கி வைத்தார். அதில், போலீஸ் குடும்பத்தினர், பொதுமக்கள், குழந்தைகளுக்கான, லெமன்ஸ்பூன், கபடி, வாலிபால், கயிறு இழுக்கும் போட்டி, மியூசிக்கல் சேர், கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன.பின்னர், மாலையில் பரிசளிப்பு விழா நடந்தது. கோவை மேற்கு மண்டல ஐ.ஜி., பெரியய்யா, டி.ஐ.ஜி., நரேந்திர நாயர், கோவை எஸ்.பி., அருளரசு ஆகியோர், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். அதில், டி.எஸ்.பி., மற்றும் இன்ஸ்பெக்டர்கள் வைரம், விஜயன், வெற்றிவேல்ராஜன், முரளி, நிர்மலாதேவி மற்றும் எஸ்.ஐ.,க்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியை தாலுகா போலீஸ் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் மைக்கேல் சகாயராஜ் தொகுத்து வழங்கினார்.