நிவாரணம் ! மழையால் பயிர்கள் சேதம் ....பாதிப்புக்கேற்ப இழப்பீடு கிடைக்கும்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜன
2021
06:14

மதுரை : மதுரை மாவட்டத்தில் சமீபத்திய தொடர் மழையால் 10 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர் சேதம் அடைந்த நிலையில், 50 சதவீதம் பேர் மட்டுமே பயிர் காப்பீடு செய்துள்ளனர்.இவர்களுக்கு இன்சூரன்ஸ் இழப்பீடும், அரசு நிவாரணமும் வழங்கப்படவுள்ளது.அதிகபட்சமாக மதுரை மேற்கு தாலுகாவில் 785 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. வாடிப்பட்டியில் 780, செல்லம்பட்டியில் 730, அலங்காநல்லுாரில் 662, கிழக்கில் 400, மேலுாரில் 320, திருப்பரங்குன்றத்தில் 92, கொட்டாம்பட்டியில் 80, டி.கல்லுப்பட்டி, உசிலம்பட்டியில் தலா 30, சேடபட்டி, கள்ளிக்குடியில் தலா 20 ஏக்கர் மற்றும் திருமங்கலத்தில் 3 ஏக்கர் என 10ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளது.மாவட்டத்தின் மொத்த விவசாயப்பரப்பு ஒரு லட்சத்து 75ஆயிரம் ஏக்கர். இதில் 50 சதவீதம் இன்சூரன்ஸ் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறப்புப் பருவத்தின் கீழ் நெல் 9,117 ஏக்கர், மக்காச்சோளம் 46,305 ஏக்கர், பருத்தி 4,028 ஏக்கர் என 51ஆயிரத்து 350 ஏக்கர் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது. 2020 - 2021 ல் 66ஆயிரத்து 616 ஏக்கரில் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது. இது 76 சதவீதம் தான்.கல்லுப்பட்டி, உசிலம்பட்டி, திருமங்கலம், கள்ளிக்குடியில் மானாவாரி சாகுபடி என்பதால் இங்குள்ள விவசாயிகள் இன்சூரன்ஸின் அருமை உணர்ந்துள்ளனர். மற்ற இடங்களில் தண்ணீர் கிடைப்பதால் பாதிப்பு வராது என்ற நம்பிக்கையில் இன்சூரன்ஸ் செய்வதில்லை.தற்போது ஏற்பட்டுள்ள 10ஆயிரம் ஏக்கர் பாதிப்பில் 50 சதவீத அளவே இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது. முழுமையான சேதம் என்றால், வங்கி நிர்ணயித்துள்ள சாகுபடி செலவாக ஏக்கருக்கு ரூ.31ஆயிரம் கிடைக்கும். அல்லது சேதத்தின் தன்மைக்கேற்ப சதவீத அடிப்படையில் இழப்பீடு வழங்கப்படும். இது தவிர அரசின் நிவாரணத் தொகையும் கிடைக்கும்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
20-ஜன-202116:37:46 IST Report Abuse
Endrum Indian என்னவளோ இது முதல் முறையாக நடப்பது போல என்ன பாவ்லா இது . ஒவ்வொரு வருடமும் இதே கதை தான். காரணமின்றி காரியம் நடப்பதில்லை - பகவத் கீதை. காரணம் ஆய்வு செய்தால் இவர்கள் தங்களை திருத்திக் கொள்ளமுடியும் இல்லையென்றால் ஒவ்வொரு வருடமும் இதே பிலாக்கணம் தான் தொடரும்.
Rate this:
Cancel
venkat Iyer - nagai,இந்தியா
20-ஜன-202108:46:45 IST Report Abuse
venkat Iyer நாகை மாவட்டத்தில் தரங்கம்பாடி தாலுகா வில் மடப்புரம் ஊராட்சியில அடிக்கடி கடந்த நவம்பர் மாதத்திலிருந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது.கடந்த இரண்டு நாட்களாக தான் முறையாக நாள் முழுவதும் வெயில் அடித்தது. ஆரம்பகட்ட காலத்தில் நடவு கரைந்தது. பின்னர் விவசாயிகள் யூரியாவை போட்டு பயிரை மேலே கொண்டு வந்தனர். பின்னர் மீண்டும் மழை வந்து பயிர் மூழ்க ஆரம்பித்தது. இதனால் தூர் வருவது குறைந்து போனது. இதற்கும் மேல் உரம் கூடுதலாக போடப்பட்டது. இவையெல்லாம் கூடுதல் செலவாக விவசாயிகளாகிய எங்களுக்கு அதிகப்படி செலவாகும். நிச்சயமாக இந்த பகுதிகளில் இன்சுரன்ஸ் கிடைக்காது. நாங்கள் 25% கூடுதல் செலவு செய்துள்ளோம். இந்நிலையில் எங்களது லாபத்தில் 50% இதனால் இழைக்கின்றோம். அதோடு விளைச்சலும் அதிகமாக கிடைக்கப்போவதில்லை. ஆதனால் எங்களுக்கு போட்ட முதல் கிடைப்பது மதில்மேல் பூனையாக இருக்கின்றது. உண்மையில் அரசாங்கம் எங்களுக்கு 6 ஏக்கர் நிலம் இருந்தால் மாதம் 2000 ரூபாய் ஓய்வூதியமாக கொடுத்தால் நாங்கள் முதலீடு கிடைக்கும் வகையில் நெல்லை விற்பனை செய்கிறோம். மத்திய அரசு விவசாயிகளை காப்பாற்ற வேண்டிய தருணம் இது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X