பள்ளி வகுப்பறையே எங்கள் சொர்க்கம் ; பத்து மாதங்களுக்கு பின் மாணவர்கள் உற்சாகம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜன
2021
06:28

மதுரை : பட்டாம் பூச்சியாக பறக்க வேண்டிய மாணவர்கள் உலகை அச்சுறுத்திய கொரோனா தொற்றால் பள்ளிக்கு செல்லாமல் ஊரடங்கு பெயரில் 10 மாதங்களுக்கும் மேல் வீட்டில் முடங்கினர்.



பெயரளவில் ஆன்லைன் வகுப்புகள், சந்தேகம் எழுந்தால் கேள்வி கேட்க முடியாத நிலையில் வாட்ஸ் ஆப், வீடியோ என ஆசிரியர்கள் முகம் காணாமல் கல்வி கற்றனர்.ஒரு வழியாக பத்தாவது மற்றும் பிளஸ் 2 வகுப்புகள் நேற்று திறக்கப்பட்டதும் மடை திறந்த வெள்ளம் போல் பள்ளியை நோக்கி மாணவர்கள் உற்சாகத்துடன் சென்றனர். மதுரையில் 534 பள்ளிகள் திறக்கப்பட்டன. பெரும்பாலான பள்ளிகளில் 98 சதவீதம் மாணவர் வருகை இருந்தது.



கொரோனா தாக்கத்தில் மீண்டு(ம்) வந்த மாணவர், ஆசிரியர்கள் முதல் நாள் அனுபவம் குறித்து...பத்து மாத ஏக்கம் தீர்ந்ததுரேஷ்மாபானு, பிளஸ் 2, அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி, மகபூப்பாளையம்: பத்து மாதங்களுக்கு பின் மீண்டும் பள்ளிக்கு வந்தது அளவில்லாத சந்தோஷம். வீட்டில் முடங்கி கிடந்த போது வகுப்பறை தான் சொர்க்கம் என உணர்ந்தோம். விரைவில் பள்ளி திறக்க வேண்டும் என்ற ஏக்கம் இருந்தது. முதலில் நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களை நேரில் சந்தித்தது மகிழ்ச்சி. பொதுத் தேர்வு, உயர்கல்வி என பல கவலைகள் இருந்தன. ஆசிரியர்கள் தெளிவுபடுத்தினர்.



உற்சாகம் தரும் வகுப்பறை யுவதர்ஷினி, பிளஸ் 2, அமுதம் மெட்ரிக், பெருங்குடி: ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்றதால் கண் வலி, உடல் சோர்வு பிரச்னைகள் ஏற்பட்டன. இன்டர்நெட்டும் சரியாக கிடைக்காததால் வகுப்பிலும் சரிவர பங்கேற்க முடியாமலும், வீடியோக்களை டவுன்லோடு செய்ய முடியாமலும் தவித்தோம். தற்போது பள்ளிக்கு நேரில் வந்தது சந்தோஷம். பள்ளியில் அனைத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் பின்பற்றப்பட்டு மிகுந்த எச்சரிக்கையுடன் மாணவர்கள் கண்காணிக்கப்படுகின்றனர்.



கொரோனா அச்சம் துளியும் இல்லை. வகுப்பறை சூழல் உற்சாகம் தருகிறது.கவனிக்க முடியவில்லை ஜெயஹரிராஜ், பிளஸ் 2, கேந்திர வித்யாலயா பள்ளி, நரிமேடு: எங்கேயும் வெளியில் செல்ல முடியாமல் வீட்டில் முடங்கியது சவாலாக இருந்தது. ஆன்லைன் வகுப்பில் சரிவர கவனிக்க முடியவில்லை. தற்போது பள்ளி திறக்கப்பட்டது மனரீதியான உற்சாகத்தை தந்துள்ளது. நேரடி வகுப்பறையில் பங்கேற்காமலே பொதுத் தேர்வு எழுத வேண்டியிருக்குமோ என்ற அச்சம் இருந்தது. அரசால் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டது வரவேற்கத்தக்கது.



நீங்கியது மன அழுத்தம்இனின் ஸ்னோ ரியா, பத்தாம் வகுப்பு, மேரிஆன் மெட்ரிக் பள்ளி, கோ.புதுார்: கல்வி கற்கும் சூழ்நிலையை எண்ணி மாணவர்கள் 10 மாதங்கள் மன அழுத்தத்தில் இருந்தோம். தற்போது முழு அழுத்தமும் நீங்கியது. பத்தாம் வகுப்பு மாணவர் முதன் முறையாக பொதுத் தேர்வை சந்திக்க உள்ளோம். தேர்வு குறித்த எவ்வித புரிதலும் இல்லை. இன்னும் உள்ள மூன்று மாதங்கள் எங்களுக்கு பொற்காலம். சமூக இடைவெளி விடுவது உள்ளிட்ட அனைத்து நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளும் பின்பற்றப்பட்டு பள்ளிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்



.உறுதி செய்யப்பட்ட பாதுகாப்புசன்பிகாபானு, பத்தாம் வகுப்பு, அரசு மேல்நிலை பள்ளி, ஆ.வல்லாளபட்டி: ஆன்லைன் மற்றும் வாட்ஸ்ஆப் வீடியோக்களில் படித்தது புரியவில்லை. சந்தேகம் ஏற்பட்டால் உடன் கேட்க முடியவில்லை. பொதுத் தேர்வு எப்படி எழுதப் போகிறோம் என்ற அச்சம் இருந்தது. பள்ளி திறக்கப்பட்டதால் அச்சம் தீர்ந்து நன்றாக தேர்வு எழுதி அதிக மதிப்பெண் எடுக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கு உள்ளே செல்லும் போதும் வெளியேறும்போதும் உடல் பரிசோதனை செய்யப்படுகிறது.



நம்பிக்கை பிறந்துள்ளதுலோகிதா, பத்தாம் வகுப்பு, அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி, ஒத்தக்கடை: வீட்டில் இருந்து ஆன்லைனில் பாடம் கற்றோம். குடும்பத்தினர் முன்னிலையில் படித்த போது சில பிரச்னைகள் இருந்தன. சரிவர கற்க முடியவில்லை. பாடம் வாரியாக பல சந்தேங்களை குறித்து இன்று ஆசிரியர்களிடம் கேட்டு தெளிவுற்றோம். ஜிங்க் மற்றும் வைட்டமின் மாத்திரைகள் மாணவிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வுக்காக குறைக்கப்பட்ட பாடத் திட்டங்கள் குறித்தும் ஆசிரியர்கள் தெரிவித்தனர். அதிக மதிப்பெண் எடுக்கும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. பள்ளிகள் தொடர்ந்து நடக்க வேண்டும்.கற்றலில் ஆர்வம் அதிகரிப்புசாராள் சலோமி, ஆசிரியை, ஏ.சி., மேல்நிலைப் பள்ளி, தல்லாகுளம்: ஆன்லைன் வகுப்பில் அனைத்து மாணவர்களும் பங்கேற்பது அரிது.



பங்கேற்ற மாணவர்கள் அக்கறையுடன் படித்தனர். 95 சதவீதம் மாணவர்கள் பள்ளிக்கு வருகை தந்தனர். வார்த்தையில் தெரிவிக்க முடியாத சந்தோஷத்தை தந்தது. பள்ளி வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளால் மாணவர்-கள், ஆசிரியர்கள் இருதரப்பிலுமே பாதுகாப்பை உணர்ந்தோம். இதுவரை நடத்தப்பட்ட பாடத்தில் இருந்து சந்தேகங்களை கேட்டனர். குறிப்பாக மாணவரின் நடத்தையில் 'பாசிட்டிவ்' மாற்றம் ஏற்பட்டுள்ளது.முதலில் கவுன்சிலிங்தென்கரை முத்துப்பிள்ளை, தலைமையாசிரியர், அரசு உயர்நிலை பள்ளி, வேடர்புளியங்குளம்: பள்ளி வளாகத்தில் அரசின் அனைத்து வழிமுறைகளும் பின்பற்றப்பட்டன.



பள்ளி மேலாண் மை மற்றும் வளர்ச்சி குழு பி.டி.ஏ., மற்றும் கிராம ஊராட்சி தலைவர் அடங்கிய உறுப்பினர்கள் குழு துவங்கி மாணவர்களுக்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முதல் நாளில் 98 சதவீதம் மாணவர் ஆர்வத்துடன் வந்தனர். சமூக இடைவெளி பின்பற்றப்பட்டது. மாணவர்களை இக்கல்வியாண்டிற்கு தயார்படுத்தும் வகையில் உளவியல் ரீதியாக கவுன்சிலிங் வழங்கப்பட்டது. பொதுத் தேர்வுகளை எதிர்கொள்வதில் உள்ள சந்தேகங்களுக்கு ஆசிரியர்கள் பதில் அளித்தனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X