மதுரை : மதுரை சி.ஐ.ஐ., (இந்திய தொழில் கூட்டமைப்பு) யங் இந்தியன்ஸ், தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் 'சிகரம் தொடு' திட்டத்தின் கீழ் தொழில் முனைவோர் கனவுகளை நிஜமாக்கிட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
தொழில்முனைவோர் மேம்பாட்டு மைய செயலாளர் ஜெய ராமன், யங் இந்தியன்ஸ் தலைவர் பூர்ணிமா, தொழில் முனைவோர் திட்ட தலைவர் ஷர்மிளா தேவி, திட்ட துணை தலைவர் சதீஷ்குமார், தொழிலதிபர் ரத்தினவேலு, வேலம்மாள் பொறியியல் கல்லுாரி பேராசிரியை சண்முகலதா பங்கேற்றனர்.