திருமங்கலம் : திருமங்கலம் அருகே நெடுமதுரை மற்றும் கொம்பாடி கிராமங்கள் அருகருகே உள்ளன. நெடுமதுரை கண்மாய்க்கு வைகை தண்ணீர் நிலையூர் கம்பிக்குடி கால்வாய் வழியாக 11 நாட்களுக்கு முன் திறந்துவிடப்பட்டது.
அப்போது தண்ணீர் கேட்ட கொம்பாடி கிராமத்தினரிடம் நெடு மதுரை கண்மாய் நிரம்பிய பின் தண்ணீரை திறந்துவிடுவதாக பொதுப்பணித்துறையினர் உறுதியளித்தனர்.அதன்படி தண்ணீர் விடாததை கண்டித்து கொம்பாடி கிராமத்தினர் குடும்ப அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். துாத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். வருவாய்த்துறை அதிகாரிகள் தண்ணீர் திறப்பதாக உறுதியளித்ததையடுத்து மறியலை கைவிட்டனர்.