மேலுார் : மேலுார் கல்வி மாவட்டத்தில் 182 பள்ளிகளில் பத்து மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கப்பட்டன.பத்தாம் வகுப்பில் 14 ஆயிரத்து 948 பேருக்கு 11 ஆயிரத்து 211 மாணவர்களும், பிளஸ் 2 ல் 12 ஆயிரத்து 166 மாணவர்களுக்கு 8 ஆயிரத்து 516 பேரும் வந்தனர்.பள்ளிகளில் மாணவர்களுக்கு சானிட்டைசர் மற்றும் முககவசம் வழங்கப்பட்டு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. மாணவர்களுக்கு கொரோனா குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டதாக மாவட்ட கல்வி அதிகாரி பங்கஜம் தெரிவித்தார்.