அரசு ஊழியர்களுக்கு இயந்திர ஓட்டுப்பதிவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜன
2021
06:44

மதுரை, : தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு தபால் ஓட்டு முறைக்கு பதிலாக மின்னணு இயந்திரம் மூலம் ஓட்டுப் பதிவு செய்ய அனுமதிக்க கோரிய வழக்கில் தேர்தல் கமிஷனுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.



தமிழக பட்டதாரி ஆசிரியர் கழக தேனி மாவட்டச் செயலாளர் பாண்டிதுரை தாக்கல் செய்த பொதுநல மனு: தேர்தல் பணியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். இவர்கள் சட்டப்படியான ஓட்டுரிமையை தபால் மூலம் பதிவு செய்ய பல இடையூறுகளை சந்திக்கின்றனர். தபால் ஓட்டுச் சீட்டு பெற உரிய படிவத்தில் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதிலுள்ள விபரங்களை உறுதி செய்தபின் ஓட்டுச் சீட்டு வழங்குவர்.ஓட்டுப் பதிவு செய்தபின் உரிய படிவங்களை இணைத்து, அங்கீகரிக்கப்பட்ட அலுவலரிடம் சான்றொப்பம் பெற்று, தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்ப வேண்டும்.



இதற்கு போதிய அவகாசம் அளிப்பதில்லை.பணிச்சூழலில் சிரமங்களுக்கு இடையே தபால் ஓட்டு பதிவு செய்து அனுப்பினாலும், எண்ணிக்கையின் போது முறையாக பதிவு செய்ய வில்லை எனக்கூறி நிராகரிக்கின்றனர்.2011 சட்டசபை தேர்தலில் ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 413 பேர் தபால் ஓட்டளித்தனர். இதில் பல்வேறு காரணங்களால் 23 ஆயிரத்து 319 பேரின் ஓட்டுக்கள் நிராகரிக்கப்பட்டன. சில நேரங்களில் தபால் ஓட்டுதான் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கிறது.



அடுத்து வரும் சட்டசபை, லோக்சபா தேர்தலின்போது தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு தபால் ஓட்டு முறைக்கு பதிலாக மின்னணு இயந்திரம் மூலம் ஓட்டுப் பதிவு செய்ய அனுமதிக்க தேர்தல் கமிஷனுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு பாண்டிதுரை மனு செய்தார்.தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு இந்திய தேர்தல் கமிஷன், தமிழக தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பி பிப்.,16 க்கு ஒத்தி வைத்தது.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X