திருப்பரங்குன்றம்:
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் வேடர்புளியங்குளம் மெயின் ரோட்டிலிருந்து முத்தரையர் காலனி வழியாக தோட்டங்கள், ஆஸ்டின்பட்டி மருத்துவமனை, போலீஸ் ஸ்டேஷனுக்கு மக்கள் செல்வர்.இந்த ரோட்டில் பாதி துாரத்திற்கு ஒன்றரை ஆண்டுகளுக்குமுன் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டது. மீதமுள்ள ரோட்டில் தார் போடப்படவில்லை. மணல் சாலையாக உள்ளது. சமீபத்திய மழையால் அந்த ரோடு சேறும் சகதியுமாக மாறியுள்ளது. டூவீலர்கள், நடந்து செல்வோர் சிரமம் அடைகின்றனர். அந்த பகுதியிலும் பேவர் பிளாக் ரோடு அமைக்க வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்தினர்.