கோவை: கோவையில், ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா கடத்தி வந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
கர்நாடகாவில் இருந்து, கோவைக்கு தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வரப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில், கடத்தி வரப்பட்ட உக்கடம், லாரி பேட்டையில் ஒரு குடோனில் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அதை தொடர்ந்து, மாநகர உதவி கமிஷனர் ஸ்டாலின் தலைமையில், உக்கடம் போலீசார் அந்த குடோனில் சோதனையிட்டனர். அப்போது, 24 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த குட்கா பறிமுதல் செய்யப்பட்டன. அதன் மதிப்பு ஒரு லட்சம் ரூபாயாகும். இது தொடர்பாக உக்கடத்தை சேர்ந்த அப்பாஸ், ஜெய்னுலாப்தீன் ஆகியோரை கைது செய்து சிறையிலடைத்தனர்.