தொழில் துவங்க கடன் ரூ.18.75 லட்சம் வழங்கல் | திருப்பூர் செய்திகள் | Dinamalar
தொழில் துவங்க கடன் ரூ.18.75 லட்சம் வழங்கல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஜன
2021
00:43

திருப்பூர், : கொரோனா சிறப்பு நிதி உதவி திட்டத்தில், இளம் தொழில் முனைவோர் 20 பேருக்கு கடன் வழங்கப்பட்டது.



தமிழக அரசு புத்தாக்க திட்டம், கொரோனா சிறப்பு நிதி உதவி தொகுப்பு திருப்பூர் மாவட்டத்தில் ஐந்து ஊராட்சி ஒன்றியத்தில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் மாநில மற்றும் மத்திய அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்கள் வாயிலாக திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.பயிற்சி முடித்தோருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் தொழில் துவங்க கடனுதவி வழங்கப்படுகிறது. அவ்வகையில் திருப்பூர் மாவட்டத்தில், கனரா வங்கியின் தொழிற் பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சி பெற்ற, 20 பேருக்கு, 18.75 லட்சம் ரூபாய் கடனுதவி நேற்று வழங்கப்பட்டது.



கடன் உதவியை வழங்கி கலெக்டர் விஜயகார்த்திகே யன் பேசுகையில், 'இளம் தொழில் முனைவோர் துவங்கும் தொழில்கள், லாபமும், வேலை வாய்ப்பும் வழங்குவதாக இருக்க வேண்டும். நிலைத்த தன்மையுடன் சிறப்பாக நிறுவனங்கள் செயல்பட வேண்டும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X