ஆதாரில் அலைபேசி எண் பதிவு செய்வதில் சிக்கல் | விருதுநகர் செய்திகள் | Dinamalar
ஆதாரில் அலைபேசி எண் பதிவு செய்வதில் சிக்கல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஜன
2021
06:59

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துாரில் ஆதார் அட்டையில் அலைபேசி எண்ணை பதிவு செய்ய வங்கிகளில் பல மணி நேரம் மக்கள் காத்து கிடக்கின்றனர்.



அரசு சலுகைகள் பெற ஆதார் அட்டை அவசியம். இதில் அலைபேசி எண்களை பதிவு செய்ய வேண்டும். இதனால் அரசு சலுகைகள் குறித்து குறுந்தகவல் பயனாளியின் அலைபேசிக்கு வங்கிகள் தெரியப்படுத்தும்.தேர்தல் நெருங்குவதால் அரசு தரப்பில் சலுகைகள் வரலாம் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.



இதுகுறித்து முறையான அறிவிப்பு இல்லை. எனினும் ஆதார் அட்டையில் அலைபேசி எண்ணை பதிவு செய்ய வங்கிகள் முன் மக்கள் பல மணி நேரம் காத்து கிடக்கின்றனர். அரசு இசேவை மையங்களில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தி, பணியாளர்களை நியமித்து சிறப்பு முகாம் நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X