செய்திகள் சில வரிகளில் /////
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜன
2021
07:00

விவசாயிகள் குறைதீர் கூட்டம்



விருதுநகர்: கலெக்டர் கண்ணன் கூறியதாவது: நாளை காலை 10:00 மணிக்கு 'கூகுள் மீட்' செயலி மூலம் காணொளி காட்சி வழியாக விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்கவுள்ளது. வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகங்கள் மூலம் விவசாயிகள் ஆன்லைன் கூட்டத்தில் பங்கேற்கலாம், என்றார்.



சாலை பாதுகாப்பு விழா



ஸ்ரீவில்லிபுத்துார்: சாலை பாதுகாப்பு மாத விழா டி.எஸ்.பி., நமசிவாயம் தலைமையில் நடந்தது. சாலை விதிமுறையை பின்பற்றுவது குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கபட்டது. மடவார்வளாகம், பைபாஸ் ரோட்டில் சீரமைப்பு பணி நடந்தது.



மணல் குவியலால் விபத்து



சிவகாசி: பஸ் ஸ்டாண்டிலிருந்து சாத்துார் செல்லும் ரோடு, சாட்சியாபுரத்திலிருந்து ஸ்ரீவில்லிபுத்துார் செல்லும் ரோட்டின் இருபுறமும் நடுமையம் வரை அதிகளவில் மணல் குவிந்துள்ளது. வாகன ஓட்டிகள் மணலில் சிக்கி கீழே விழுந்து காயமடைகின்றனர். வாகனங்கள் செல்லும் போது எழும் துாசி கண்கள், நாசியை பதம் பார்க்கிறது. உயிர் பலி ஏற்படும் முன் மணல் குவியலை அகற்ற நெடுஞ்சாலை, நகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும்.



புத்தாடை வழங்கல்



விருதுநகர்: கோல்வார்பட்டியில் ரூரல் எஜூகேஷனல் அண்ட் சேரிட்டபுள் டிரஸ்ட் சார்பில் புத்தாடை வழங்கப்பட்டது. தலைவர் லட்சுமணபெருமாள், பொறியாளர் பாலகிருஷ்ணன், தொழிலதிபர் கதிரேசன் வழங்கினர். ஏற்பாடுகளை ரெஸ்பெக்டர் தொண்டு நிறுவன தலைவர் திருமதி மாரிசெல்வம், லட்சுமண பெருமாள் செய்தனர்.



விவசாயிகள் ஆர்ப்பாட்டம்



ஸ்ரீவில்லிபுத்துார்: தமிழக விவசாயிகள் சங்கம், தென்னை விவசாயிகள் சங்கம், அனைத்து விவசாயிகள் சார்பில் வட்டார அளவில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க கோரியும் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தின் முன்பு ஆர்பாட்டம் நடந்தது.தென்னை விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் முத்தையா தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராமச்சந்திரராஜா, அம்மையப்பன், ராமமூர்த்தி பங்கேற்றனர்.



மாணவர் சேர்க்கை முகாம்



சிவகாசி: ஹயக்ரீவாஸ் சர்வதேச பள்ளியில் மாணவர் சேர்க்கை நடந்தது. பள்ளி தலைவர் வெங்கடேஷ் பிரசாத் வரவேற்றார். தலைமை முதல்வர் பாலசுந்தரம் துவக்கி வைத்தார். தாளாளர் ஜெயக்குமார், முதல்வர் அம்பிகாதேவி பேசினர். துணை முதல்வர்கள் ஞானபுஷ்பம், சுதா பங்கேற்றனர்.வணிகவியல் சொற்பொழிவுசிவகாசி: ஸ்ரீ காளீஸ்வரி கல்லுாரி வணிகவியல் துறை சார்பில் நிறுவன செயலாளர் உத்தியோகம் என்ற தலைப்பில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு சொற்பொழிவு நடந்தது. துறை தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். பயிற்சியாளர் விஜய் பேசினார். பேராசிரியர் ஜாஸ்மின் பாஸ்டினா நன்றி கூறினார்.



பொங்கல் பட்டிமன்றம்



திருச்சுழி: கிளை நூலகத்தில் இன்றைய சமூக நலத்திற்கு அடிப்படையாக அமைவது இளைஞர்களின் வேகமே. மூத்தோர்களின் விவேகமே என்ற தலைப்பில் நடந்த பட்டிமன்றத்தில் தேவாங்கர் கல்லூரி பேராசிரியர் செல்லப்பாண்டியன் பேசினார். ஆசிரியை சேதுபதி, புலவர் ராஜபாண்டி, ஸ்வேதா, கவிஞர் தங்கராஜ், ஆசிரியைகள் சாந்தி, மீனாட்சி பேசினர். நடுவராக இந்து சமய அறநிலையத்துறை தணிக்கை ஆய்வாளர் நாகநாதன் இருந்தார்.



சேதமடைந்த குடிநீர் தொட்டி



சிவகாசி: கிச்சநாயக்கன்பட்டியில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி ஏழு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. தொட்டியின் துாண்கள், மேற்புறம் சேதமடைந்து விழும் நிலையில் உள்ளது. எப்போது விழும் என மக்கள் அச்சத்தில் உள்ளனர். தொட்டியை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X