விருதுநகர் : மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன் கூறியதாவது: தீயணைப்பு துறை சார்பில் 'தீ' செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. காவலன் செயலியை போல் இச்செயலியில் 'உதவி' என்ற பொத்தானை அழுத்தினால் அருகிலுள்ள தீயணைப்பு நிலையத்தை தொடர்பு கொள்ள இயலும். கூகுள் ப்ளே ஸ்டோரில் இச்செயலியை பதிவிறக்கம் செய்து அலைபேசி எண்ணை பதிவு செய்து பயனடையலாம். இருப்பிடத்தை இயக்கி அதன் பகிர்வை 'எப்போதும்' என அமைக்க வேண்டும்.இதன் மூலம் 5 வினாடிகளில் அருகிலுள்ள நிலையத்தை உடன் அழைக்கலாம். தீயணைப்பு வாகனம் எங்கு வருகிறது என்பதையும் அறிந்து கொள்ளலாம், என்றார்.