ராஜபாளையம் : ராஜபாளையம் செவல்பட்டி தெருவில் அத்ரித் மருத்துவமனையை நிர்வாக இயக்குனர் டாக்டர் சுபாஷினி, செல்வமாரி துவக்கி வைத்தனர். அரசு ஒப்பந்தக்காரர் ராமசுப்பு, ந.அ.துவக்கப்பள்ளி ஓய்வு தலைமையாசிரியை மகாலட்சுமி, ராம் கன்ஸ்ட்ரக் ஷன் ஸ்ரீராம்ஜி, ரம்யா முன்னிலை வகித்தனர். டாக்டர்கள் ராஜதுரை, சிவக்குமார், அருண்பிரகாஷ், சவுந்தர்ராஜன், திருமுருகன், ராம்பிரகாஷ், சுந்தரமூர்த்தி, கல்பனா கலந்து கொண்டனர்.