விருதுநகர், ஜன.௨௧-
சிவகாசி கவுண்டன்பட்டியை சேர்ந்த டிராவல்ஸ் உரிமையாளர் குருநாதன் 34. நேற்று முன்தினம் இரவு காரில் கவுண்டன்பட்டியில் இருந்து எரிச்சநத்தம் சென்ற போது மின் கசிவால் கார் தீப்பிடித்து எரிந்தது. தீ குருநாதன் மீது பரவி உடல் கருகி பலியானார். ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
* சிவகாசி வெள்ளூரை சேர்ந்த பிளம்பர் தமிழ்ச்செல்வன் 32. நேற்று முன்தினம் இரவு வெள்ளூரில் இருந்து வீடு திரும்பும் போது நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார். விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியில் இறந்தார். ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.