விருதுநகர் : விருதுநகர் மெயின் பஜார் வழியாக பஸ் வருவதற்கு தடை விதிக்க கோரி பஜார் வியாபாரிகள் சங்கத்தினர் கருப்பு பேட்ஜ் அணிந்து வியாபாரத்தில் ஈடுபட்டு எதிர்ப்பை தெரிவித்தனர். சங்க தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். தி.மு.க., எம்.எல்.ஏ., சீனிவாசன் துண்டு பிரசுரம் வழங்கினார். டி.டி.கே., ரோடு வழியாக பஸ்கள் செல்ல வலியுறுத்தினர். துணை தலைவர் தமிமுன் அன்சாரி, செயலாளர் பெரியசாமி, துணை செயலாளர் பாண்டியராஜ், பொருளாளர் அன்புராஜன் பங்கேற்றனர்.